Thursday, June 18, 2009


உலக மக்கள் தான் மக்களா ??? ! தமிழீழ மக்களென்ன கற்களா ???







யுத்தம் தொடர்கிறது !
வருடங்கள் மாதங்களாகி, மாதங்கள் வாரங்காளகி,
இன்று வாரங்கள் மணித்தியாலங்களாகவும் மாறி
இன்று வரை !

நூறாகி நின்ற உயிரிழப்புக்கள் ஆயிரமாகியதே தவிர !
இந்த இலட்சணத்தில் சர்வதேசம் !
மனிதக் கேடயம், ஆயுதக் களைவு !
என்ற திசை திருப்பல்

தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை
குறித்து பேச முடியவிட்டாலும் !
குறைந்த பட்சம் உணவையும்;, மருந்தையுமாவது
இவர்களால் அனுப்ப இயலவில்லை !

தேசிய இனப் பிரச்சினை எதிர்கொள்ளும்
போராட்டங்களை !
பயங்கரவாதமென்கின்ற சில்லறைத்தனமான
சிந்தாந்த வரையறைக்குள் உள்ளடக்குவது !

இத்தகைய குறுகிய பார்வையானது அடிப்படை
பிரச்சினைகளையும் தீர்க்கப் போதில்லை !
மாறக
பிரந்திய சர்வதேச வல்லரசாளர்களின்
பூ கோள நலன்களுக்கும்
தற்போது நிகழும் இந்து சமுத்திரப் பிராந்திய
ஆதிக்கக் கயிறு இழுப்பில்
மோதல் இடம் பெறும் பகுதியில் சிக்குண்டுள்ள

மக்களின் வெளியேற்றத்திற்கு அமெரிக்காவின் உத்தேசம்
மேற்க்கு நாடுகளின் அதீத வலியுறுத்தல் ஐ.நா வில்
அனைத்து போர் குற்ற விசாரனை என்ற நாடக மேடையில் !

சிறிலங்காவின் கூலிப்படை நாடுகளின் தலையீட்ல் தோல்வி
சிங்கள இராணுவம் செய்த அத்துமீறல்களுக்கும்
மனித உரிமை மீறல்களுக்கும் ஆதாரம் இருப்பதாக
இன்றைக்கு அமெரிக்கா சொல்கிறது !

இந்த அமெரிக்கா அன்றைக்கு ஏன் சொல்லவில்லை?
ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் எல்லாம் முடிந்த பிறகு
இலங்கை சென்று பார்வையிடுவது ஏன்?
எவ்வாறு இருப்பினும் இலங்கை விடையத்தில்
உறுதியான தீர்மானங்கள் எடுப்பதில்
சர்வதேச சமூகம் இன்னும் தயக்மான
நிலைப்பாட்டில் இருப்பதாகவே தோன்றுகிறது.

சிங்கள வல்லாதிக்கனதும் காந்தியக் காங்கிரஸினதும் சர்வதேச நாசகார
சத்திகளினது கொட்டம் அடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை"
உலகே உனக்கு கண்ணில்லையா? எங்கள் மண் என்ன மண் இல்லையா?